ஜூன் 2025ல் பொருளாதாரத்தில் மிக பெரிய முன்னேற்றம் பெரும் ராசிகள்
இந்த மே மாதத்தில் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி தொடங்கி உள்ள நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் செவ்வாய் கிரகமும் தனது நிலையை மாற்றம் செய்ய உள்ளது. இந்த கிரக மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதாரத்தில் மிக பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த ஜூன் மாதம் மிகவும் சாதகமான பலனை கொடுக்க உள்ளது. அதாவது இவர்களுடைய விடாமுயற்சிக்கு ஏற்ப அவர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது. வாழ்க்கையில் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்க உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு இந்த ஜூன் மாதம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்க உள்ளது. திசை மாறி சென்ற பிரச்சனைகள் நல்ல முடிவை பெறப்போகிறது. குடும்பத்தில் அமைதி உண்டாகும். புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் மனதளவில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க உள்ளது. அவர்களின் மன நிலையில் நல்ல தெளிவு பிறக்கும். சகோதரி வழியே சந்தித்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். வாங்கிய கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். புதிய முதலீடுகள் சிறப்பான பலனை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |