வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்
மனிதர்களுடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கு ஏற்றது போல் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.
ஆதலால் அவர்களுக்கு பணம் கைகளில் தங்குவது இல்லை. அந்த வகையில் வீடுகளில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறவும் வீண் செலவுகளை தவிர்க்கவும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி சாணக்கியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
மனிதர்கள் வாழ்க்கையில் எதையும் மரியாதையோடும் நடத்த பழக வேண்டும். அதேபோல் தான் நம் பணத்திற்கும் மரியாதை கொடுத்து வளர வேண்டும். பணத்தை உதாசீனமாக செலவு செய்வதும், பணத்தை மதிக்காமல் இருப்பதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை நமக்கு கொடுத்து விடுகிறது.

மேலும், பணத்தை எப்பொழுதும் புத்திசாலித்தனமாக செலவு செய்வது அவசியமாக இருக்கிறது. அப்பொழுதுதான் நிதி சிக்கல்களில் இருந்து மீளவும் செலவுகள் வந்தாலும் மீண்டும் பணம் நம்மிடம் சேரக்கூடிய அதிர்ஷ்டமும் நமக்கு கிடைக்கிறது.
அதை போல் எப்பொழுதும் நாம் ஒரே ஒரு வருமானத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துவது அவ்வளவு உகந்தது அல்ல. யாருக்கு எப்பொழுது பொருளாதார நெருக்கடிகள் வரும் என்று தெரியாது. ஆதலால் பல வருமான வழிகள் இருந்தால் அவை நமக்கு நிச்சயம் ஆபத்துக்களில் கை கொடுக்கும். ஆதலால் புதிய வருமான வழிகளை நாம் உருவாக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

பணம் சம்பாதிப்பதற்கு நிச்சயம் நேரம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆதலால் நாம் எந்த ஒரு நேரத்தையும் தேவையில்லாமல் வீணடிக்க கூடாது. நம்மில் பெரும்பாலான மக்கள் பெரிய தொகை கொண்டு செலவு செய்வதை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கின்றோம்.
ஆனால் சிறிய செலவுகளை நாம் கண்டு கொள்வதில்லை. அப்படி இல்லாமல் சின்ன சின்ன செலவுகளையும் நாம் சரியாக கணக்கில் கொண்டு எழுதி வரும் பொழுது அவை நாளைக்கு மிகப்பெரிய நிதி பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
அதோடு பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை போல் சேமிப்பது மிக மிக முக்கியமாக இருக்கிறது. நாம் பணத்தை சேமிக்க பழகும் பொழுது எந்த ஒரு கஷ்டமும் நம்மை நெருங்குவது இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |