சந்திர கிரகணம்: இந்த ராசிகளெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சந்திர கிரகணம் அன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
சந்திர கிரகணம்
2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் 14 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி காலை 9.27 மணிக்கு தொடங்கி மாலை 3.03 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 12.28 மணிக்கு உச்சமடைகிறது.
கிரகணம் நடக்கும் நேரம் முழுவதும் பகல் நேரம் என்பதால், நம் நாட்டில் கிரகணத்தைப் பார்க்க இயலாது. இதன் காரணமாக ஜோதிடப்படி, சில ராசிகளுக்குச் சாதகமற்ற சூழல் உருவாகும். அவை எந்தெந்த ராசிகள் என்றால்,
மேஷம்
மன அழுத்தம் அதிகரிக்கும். நிதி நிலையில் ஏற்ற, இறக்கங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவும். புதிய வேலைகள் எதுவும் தொடங்க வேண்டாம்.
கடகம்
நிதி நிலை ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனம் தேவை. உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் சந்திக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை.
கன்னி
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், உங்கள் ராசியில் நடக்கிறது. எனவே, ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டாம். எதிலும் சரியான திட்டமிடல் அவசியம். தேவையற்ற அலைச்சலும், நேர விரயமும் ஏற்படும்.
துலாம்
உணர்ச்சி வசப்படுதல், கோபம் அதிகரிக்கும். மன கலக்கம் ஏற்படும். இனம் புரியாத பயம், பதட்டம் ஏற்படும். அனைத்து செயல்பாடுகளிலும் பொறுமை முக்கியம்.
இந்த சந்திர கிரகணம் தொடங்குவதற்கு முன் 9 மணி நேரத்திற்கு முன் சூத காலம் தொடங்குகிறது. அதனால் பொதுவாகவே, இந்த சூத காலம் தொடங்கி கிரகணம் முடியும் வரை சுப காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடினமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது கூடுதல் தகவல்.