சந்திர சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு சக்தி இருக்குமா?
மக்கள் மத்தியில் கிரகணம் என்பது பலரையும் பயமுறுத்தக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் கிரகணம் என்பது தீமைகளை மற்றும் நிகழ்த்த கூடிய விஷயம் அல்ல, உண்மையில் அந்த நாளின் சிறப்புகளை தெரிந்து கொண்டால் நம் மனதில் பயம் விலகுகிறது.
அந்த வகையில் சந்திர கிரகணம் அன்று பிறக்கும் குழந்தைகள் எவ்வாறான குணம் படைத்திருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும். சந்திர சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கும் முக்கியமான விசேஷங்கள் என்னவென்று பார்ப்போம்.
சந்திர சூரிய கிரகணத்தின் பொழுது பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஆளுமை பண்பு கொண்ட குழந்தைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நற்பெயரும் புகழும் மிகவும் இயற்கையாகவே கிடைக்கிறது. இவர்களுக்கு இயற்கை துணை நின்று அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய உதவுகிறது.
மேலும் சந்திர சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் வலிமையானவர்களும் சிந்தனையில் தெளிவானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எளிதில் மக்களை கவரக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சமயங்களில் இவர்களுடைய வாழ்க்கை சவாலாக இருந்தாலும் அதை அவர்கள் முறியடித்து சாதனையாக மாற்றுகிறார்கள்.
குறிப்பாக சந்திர சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் ஒரு அதிகாரம் படைத்த பதவிகளிலும் ஆட்சி செய்யக்கூடிய உயர் பதவிகளும் அவர்கள் அமர்ந்து வெற்றி பெறுவார்கள். இயற்கையாகவே இவர்களுக்கு துணிச்சல் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சரியாக ஆலோசித்து தீர்மானம் செய்து ஒரு நல்ல முடிவை கொடுக்கக்கூடிய ஒரு பண்பு இவர்களிடம் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் கலெக்டர், முதலமைச்சர் என்ன மிகப்பெரிய ஒரு பலம் படைத்த பதவியில் அமரும் வாய்ப்புகள் கூட இவர்களுக்கு உருவாகும். அதனால் கிரகங்களில் பிறந்தவர்கள் தவறாமல் ஆன்மீகம் தியானம் தெய்வ வழிபாடு போன்றவை முறையாக கடைபிடித்து வரும் பொழுது அவர்களுக்கு தெய்வத்தின் துணையால் பல விஷயங்களை சாதனை செய்வது எளிதாக மாறுகிறது. இவர்கள் இடம் இயற்கையாகவே தெய்வ விஸ்வாசமும் நம்பிக்கையும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







