ஜோதிடம்: ஒருவர் ராசியை வைத்து அவர்களுடைய குண நலன்களை தெரிந்து கொள்ள முடியுமா?

By Sakthi Raj Apr 29, 2026 04:42 AM GMT
Report

 ஜோதிடம் என்பது ஒரு ஆராய்ச்சி கலை போன்றது. அதாவது, நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்க கூடிய ஒரு ஆராய்ச்சி புத்தகமாக செயல்படுகிறது. சமயங்களில் அவை சரியாகவும் இருக்கலாம், சமயங்களில் சில வேறுபாடுகள் கொண்டும் இருக்கலாம்.

அப்படியாக, நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் அமர்ந்திருக்க கூடிய இடத்தை தான் நாம் நம்முடைய ராசியாக எடுத்துக் கொள்கின்றோம்.

அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் சந்திரன் அமைந்திருக்கக் கூடிய வீட்டின் அதிபதியை பொறுத்து அவர்களுடைய குண நலன்களை சொல்லப்படுகிறது.

ஆனால், உண்மையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ராசி காரகத்துவம் தான் அவர்களாக இருக்கிறார்கள் என்று கேட்டால் கட்டாயம் இல்லை. அதாவது மேஷ ராசி, ரிஷபம் ராசி என்று 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது.

2026: துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது

2026: துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது

 ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு வகையில் வேலை செய்யக்கூடியதாக இருப்பதால் அங்கு சந்திரன் அமர்ந்திருக்கும் பொழுது அதனுடைய காரகத்துவத்தை இந்த ஜாதகர் பெற்று இருப்பார்களோ தவிர அந்த ராசியின் குணாதிசயங்கள் அப்படியே இவர்களிடம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

சந்திரன் என்பது மனதை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக ஒருவர் ரிஷப ராசியில் பிறந்து இருக்கிறார் என்றால் ரிஷப ராசி சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய ராசி. அதனால், இந்த ராசியினருக்கு அதிக அளவில் ஆடம்பர பொருட்கள் மீது விருப்பம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த மனநிலையில் இவர்களுக்கு அந்த சிந்தனை ஆசைகள் இருக்கும். அதுவே அவர்களுடைய வாழ்க்கையாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

ஆதலால் நாம் ஒருவருடைய ராசியை வைத்து அவர்கள் இப்படித்தான் இன்று கணித்து கொள்வது தவறு என்று பல்வேறு ஜோதிட குழப்பங்களையும் ஆலோசனைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள். அதை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US