கோலாகலமாக நடந்த தஞ்சை பெரியகோவிலின் சித்திரை தேரோட்டம்
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது.
அன்றுமுதல், 15 ஆம் திருநாளான சனிக்கிழமை அதாவது இன்று காலை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில், கோவிலில் காலை ஸ்ரீ தியாகராஜர் ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.
இன்று காலை 7.15 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கப்பட்டது.
முதலில் விநாயகர், சுப்ரமணியர் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது.
அதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் செல்கின்றன.
இத்திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் சில இடங்களில் தேர் நின்று செல்கின்றன.
விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர், நீர் மோர் வழங்கி வருகின்றன.
இவ்விழாவையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பிற்க்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |