சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற உள்ள ஆனி திருமஞ்சன தேரோட்டம்

By Sakthi Raj Jul 09, 2024 08:00 AM GMT
Report

சிதம்பரம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நடராஜர் தான்.இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அப்படியாக இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் காலை, மாலை வேளையில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற உள்ள ஆனி திருமஞ்சன தேரோட்டம் | Chidambaram Natarajar Koyil Therottam Festival

விழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு கீழவீதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

மன கவலைகளை போக்கும் பக்தி பாடல்கள்

மன கவலைகளை போக்கும் பக்தி பாடல்கள்


இதையடுத்து அங்கிருந்த திரளான பக்தர்கள் சப்பரத்தை 4 வீதிகள் வழியாகவும் இழுத்து சென்று தெருவடைச்சான் சப்பரம் 4 வீதிகள் வழியாக வீதிஉலா சென்று நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கீழவீதியை அடைந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன மகா தரிசனமும் நடைபெற உள்ளது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US