அம்மன் மீது பட்ட சூரிய ஒளி - பரவசமடைந்த பக்தர்கள்

By Kirthiga Apr 27, 2024 09:15 AM GMT
Report

தமிழ்நாட்டின் தேனி மாவட்ட சின்னமனூர் என்ற ஊரில் தாடிச்சோரி என்ற பகுதியில் வாழ்ந்த மக்கள் உருவாக்கிய கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் மீது சூரிய ஒளிப்படுவதால் பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்துள்ளனர்.

அம்மன் மீது பட்ட சூரிய ஒளி

தேனி மாவட்ட சின்னமனூர் என்ற ஊரில் தாடிச்சோரி என்ற பகுதியில் வசித்த ஊர் மக்கள் 150 ஆண்டுகளுக்கு பஞ்சத்தால் வாடியதனால் மூர்த்தி நாயக்கன்பட்டி என்ற இடத்திற்கு சென்று வசித்தனர்.

அடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னரா சொந்த ஊரிற்கே சென்று சூடம்மாள் அம்மனை வழிபட்ட இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து நாயக்கன்பட்டி இடத்தில் கோயில் கட்டினார்கள்.

இவ்வாறு உருவாகிய கோயில் தான் ஊர் மக்களுக்கு கேட்கும் வரத்தை வழங்கும் அம்மனாக திகழ்ந்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பே ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு சிறப்பான வழிப்பாட்டன் இக்கோயில் கட்டப்பட்டிருந்தது.

அம்மன் மீது பட்ட சூரிய ஒளி - பரவசமடைந்த பக்தர்கள் | Chinnamanur Amman Kovil

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 2 ஆம் திகதி தொடர்ந்து 3 நாட்களுக்கு திருவிழா செய்யப்படும். அதையடுத்து அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நிகழும்.

தற்போது 3 ஆண்டுகளாக ராஜகோபுரத்தின் மீது சூரிய ஒளிப்பட்டு அம்மனின் காலில் விழுவதை பக்தர்கள் கண்டுள்ளனர்.

இதை பார்த்த பக்தர்கள் சூரிய பகவான் அம்மனை வழிபடுவதை போன்று தத்ரூபமாக சூரிய ஒளி அம்மன் பாதங்களில் விழுகிறது என கூறி வருகின்றார்கள்.

மேலும் சுற்று வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US