சித்ரா பௌர்ணமி: நாம் சொல்ல வேண்டிய மந்திரம்
பாவங்களைப் போக்கும் சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.
நம் வாழும் காலம் முடிந்து நம் உயிரை எடுத்துக் கொள்ளும் எமதர்மராஜன் காரியதரிசியான சித்திரகுப்தனின் வழிபாட்டு நாள் சித்ரா பௌர்ணமி.
அதாவது மனிதர்களின் பாவம் நிறைந்த வாழ்க்கையை இருள் பகுதியாக கணக்கெடுப்பவர் இவர்தான்.
இந்த பாவ கணக்குக்கு ஏற்ப இறுதி கால வாழ்வை அளிப்பவர். வாழ்வின் இறுதியில் நோய் நொடியில் எழ முடியாமல் படுக்கையிலே எல்லாம் கழிப்பவர்கள் என்ன பாவம் செய்தனோ என புலம்பவர். அப்படியாக இவர்களைப் போன்றவர்கள் சித்திரகுப்தனை தான் சரண் அடைய வேண்டும்.
நான் செய்தது தவறுதான் பல பாவங்கள் செய்து விட்டேன். அதற்குரிய பலனை அடைந்து விட்டேன்.என் இருள் நிறைந்த வாழ்வை மாற்றி ஒளி ஏற்றுங்கள் என வேண்டினால் சிரமங்களை குறைப்பார் சித்திரகுப்தன்.
மேலும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தனுக்கு அவரது துணைவி சித்ரலேகாவுக்குமான திருமண நாளும் கூட.
காஞ்சிபுரத்தில் உள்ள இவரது கோவிலில் இந்நாளில் திருக்கல்யாணம் நடத்தப்படும்.
மேலும் இந்நாளில் சித்திரகுப்தனை வழிபடும் பொழுது சொல்லவேண்டிய சித்ர குப்த மந்திரம்
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்!!
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்!!
இந்த மந்திரத்தை சித்ரா பௌர்ணமி அன்று சொல்லி வழிபடுவதால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |