சினிமா கோவில் குறித்து தெரியுமா? தெலுங்கு சினிமாவின் வெற்றிக்கு இது தான் காரணமாம்
தெலுங்கு சினிமாக்கள் வெற்றியடைவதற்கு காரணமாக இருக்கும் கோவில் என கூறப்படும் சினிமா கோவில் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சினிமா கோவில்
பொதுவாக சினிமா துறையில் உள்ளவர்கள் ராசி, அதிர்ஷ்டம் இவற்றின் நம்பிக்கை அதிகமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு வெற்றியை அளிக்கும் விதமாக உள்ள சினிமா கோவில் ஒன்று ஹைதராபாத் அருகே அம்மாபுள்ளி கிராமத்தில் இருக்கின்றது.
இந்த கோவில் கட்டப்பட்டது எவ்வாறு என்றால் இதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. அதாவது அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி இந்த இடத்தில் கோவில் கட்டுமாறு கூறியுள்ளாராம். ஆதலால் இந்த கோவில் புராணங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

குறித்த கோயில் 12ம் நூற்றாண்டில் கீழை சாளுக்கிய மன்னர்கள் கட்டியுள்ளனர். பின்பு இந்த பகுதியை ஆண்ட பல குறுநில மன்னர்களால், இதனை சுற்றியுள்ள பிரகாரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மிகப்பெரிய கோபுரங்கள், பெரிய மதில் சுவர்கள் அனைத்தும் 17ம் நூற்றாண்டில் வட மற்றும் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளதாம்.

இதன் கோபுரத்தின் ஒவ்வொரு நிலையிலும் விஷ்ணுவின் தசாவதார சிறப்பம்சங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் செது்க்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் மகாவிஷ்ணு அனந்த சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கோயில் மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. கோவில் பிரகாரம் மட்டும் 9 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம். ஆதலால் அதிகமான தெலுங்கு படங்கள் இங்கு படம்பிடிக்கப்படுகின்றது.

இதன் கருவறையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட சீதா ராமச்சந்திர சுவாவி சிலை அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலின் சிறப்பு அஞ்சனை புத்திரன் அனுமன், கருவறையில் ராமரின் பாதத்திற்கு அருகில் வீற்றிருப்பாராம்.
வனவாசம் செய்த போது ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் இங்கு தங்கியிருந்ததாகவும், அப்பொழுது அனுமனை அவர் சந்திக்கவில்லை என்பதால் கருவறையில் அவரது சிற்பம் இல்லையாம்.

வெற்றியடையும் தெலுங்கு சினிமா
தெலுங்கு சினிமாவில் இந்த கோயில் பிரபலமாக உள்ள நிலையில், இதில் ஒரு காட்சி வைத்தாலே படம் சூப்பர்ஹிட் ஆகிவிடுவதாக டோலிவுட்டில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கோயிலில் தான் திரைப்படத்தின் பூஜைகள், நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் செய்கின்றார்களாம்.
2001ம் ஆண்டு மகேஷ் பாபு நடித்த முராரி திரைப்படம் மெகா ஹிட் ஆன பின்பு தெலுங்கு திரையுலக பிரபலங்களின் ஹிட் செண்டிமெண்டாக மாறியுள்ளது.

பின்பு சைந்தவி, நிந்தா ஆகிய படங்களும் படமாக்கப்பட்டன. தற்போது கோயிலில் திருமணம் செய்வது, திருமணப் புகைப்படம் எடுப்பது போன்றவை சீதாராமரின் ஆசிபெறுவதாக கருதப்படுகிறது.
இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால், ஹைதராபாத் வரை விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் கோயிலை அடையலாம்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |