ஒரே நாளில் ஐந்து நிறங்களில் மாறும் அதிசய சிவலிங்கம்
மனிதவாழ்கையில் கர்ம வினைகளை அகற்றி புண்ணியம் வழங்குபவர் சிவபெருமான்.அவரை வழிபட வாழ்க்கையில் நிச்சயம் மோட்சம் கிடைக்கும்.அப்படியாக நம்முடைய சிவபெருமான் கோயில் இந்தியா முழுவதும் இருந்தாலும் நம்மை அதிசயத்திலும் வியப்பிலும் ஆழ்த்துகிறது இந்த அதிசய கோயில்.அதை பற்றி பார்ப்போம்.
நாம் எல்லோரும் சிவபெருமான் ஒரு நிறத்தில் தான் பார்த்துஇருப்போம்.ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் ஒரு நாளில் ஐந்து நிறங்களாக மாறுகிறார்.இந்த நிறம் மாறும் ஈசனின் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர் என்னும் கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவுர் கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லுர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கோவில் ஆகும்.இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர்.கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. இங்குள்ள மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார்.
இவரை வேறு எங்கும் பார்க்க முடியாத அதிசய லிங்கம் ஆவார்.அதாவது ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை என்று ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகிறார்.இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை மற்றும் குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.
அதாவது காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிவலிங்கத்தை எங்கும் காணமுடியாது ஆனால் அவை நம் தமிழ்நாட்டில் அமையப்பெற்றது நம் சிறப்பு ஆகும்.ஆக முடிந்தால் அனைவரும் ஒருமுறை இந்த பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறைவன் அருள் பெற்று வாழ்க்கையை வளம் ஆக்குவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |