ஒப்பீடுகள் உங்கள் ஆன்ம பலத்தை குறைக்கும்
உங்கள் முலை பல பிறவிகளாக தொடர்ந்து ஒரே மாதிரி வேலைகள் செய்து பலகத்திற்கு அடிமையாகி உள்ளது. அந்த பழக்கம் தான் ஒப்பீடு செய்தல்
நான் உங்கள் முன் அமர்ந்து என் பையில் இருந்து மஞ்சள் நிற உருண்டை ஒன்றை எடுக்கிறேன் என என்றால் அதை பார்த்த மாத்திரத்தில் உங்கள் மனதில் என்னவெல்லாம் ஓடும் அது மாம்பழமா? பந்தா? விளையாட்டு பொருளா? கலைப்பொருளா? இன்னும் நீங்கள் ஏற்கனவே பார்த்த அத்தனை மஞ்சள் உருண்டைகளுடனும் அதனை ஒப்பிட்டு அதுவா இதுவா என பெரிய போரே நடக்கும் அல்லவா.,
கொஞ்சம் நிதானமா இருந்தா அது என்ன என்று அவரே சொல்ல போகிறார் என்ற எண்ணம் உங்களுக்குள் உதித்து நீங்கள் அந்த மஞ்சள் உருண்டையை பற்றின முன் கணிப்பு இல்லாமல் இருப்பிர்களானால் நீங்கள் ஒரு நல்ல ஆன்மீகவாதி தான் என்பதில் சந்தேகம் இல்லை
பொருட்கள் மட்டுமல்ல ஒருவர் பேசி முடிப்பதற்குள் அவர் என்ன சொல்ல வருகிறார் அவர் சொல்ல வருவதன் உண்மை அர்த்தம் என்ன என்பதை கணித்து அவர்களின் பேச்சை முடிப்பதற்குள் நீங்களாகவே அவர்கள் இதை தான் சொல்ல வந்தார் என பயித்தியக்காரத்தனமாக முடிவினை எடுத்து விடுகிறிர்கள்
இது எவ்வளவு பெரிய தவறு., ஒருவரின் வார்த்தையை செயலை புரிந்து அதாவழியே அவர் நம்மிடம் என்ன தகவல் கூறினார் என்பதை உள்வாங்கி அதன் பின் தான் அவருக்கு பதில் அளிக்க வேண்டும்
வள வள வென்று வெட்டியாக பேசிக்கொண்டு இருப்பதும், நீங்கள் ஒரு முடிவில் நின்று அந்த முடிவில் இருந்து மற்றவரை விமர்சனம் செய்யும் போதும் அடுத்தவரை பற்றியே நினைத்து நொந்து புலம்பி கொண்டும், மனதளவில் வெகுண்டு இருக்கும் போதும் உங்கள் உயிர் சக்தி அப்பறிவிதமாக செலவு ஆகிக்கொண்டே இருக்கின்றது
ஜே கிருஷ்ணமூர்த்தி இப்படியாக குறிப்பிட்டு இருப்பார்
குழந்தை பருவம், பள்ளிப்பருவம் முதல், இறக்கும் வரை, வாழ்க்கை முழுவதும் நம்மை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.
இன்னொருவருடன் ஒப்பிடுகையில் என்னை நானே அழித்துக்கொள்கிறேன்.
ஒரு பள்ளியில், நிறைய சிறுவர்கள் உள்ளனர், ஒருவனை மிகவும் புத்திசாலியான மாணவனுடன் ஒப்பிடுகையில், உண்மையில் அச்சிறுவனுக்கு என்ன நடக்கிறது? அவன் மந்தமாகிறான், நீங்கள் அச்சிறுவனை அழிக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை முழுவதும் நடக்கிறது.
தனக்கு மேலேயும் கீழேயும் யாரும் இல்லை; தன்னைவிட உயர்ந்தவர் தாழ்வானவர் என யாரும் இல்லை எனும் போது, நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; இந்த ஒப்பீட்டு செயல்முறை முடிவுக்கு வந்தால்தான் நீங்கள் யார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
நான் எப்போதும், சில மாகாத்மாக்கள் அல்லது அறிஞர், தொழிலதிபர், எழுத்தாளர், கவிஞர் என மற்றவருடன் என்னை ஒப்பிட்டால் எனக்கு என்ன நடக்கிறது? நான் ஏதோ ஒன்றை அடைய, இலாபம் பெற, மற்றொன்றாக மாறுவதற்காகவே ஒப்பீடு செய்கிறேன்.
ஆனால், என்னை புரிந்துகொண்டாலே நான் முன்னோக்கி செல்ல முடியும்.
மற்றவரோடு என்னை ஒப்பிடாதபோதுதான், நான் என்னவாக இருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ள தொடங்குகிறேன்.
தன்னை புரிந்துகொள்ள தொடங்குவது மிகவும் பேரார்வமுடையது, மிகவும் சுவாரஸ்யமானது; தன்னைப் பற்றிய புரிதலானது, இந்த அனைத்து முட்டாள்தனமான ஒப்பீடுதல்களுக்கும் அப்பால் நம்மை அழைத்து செல்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |