ஆஞ்சநேயரை வழிபாடு செய்த பசு.. திருவாரூரில் நடந்த அதிசயம்
விலங்குகள் பல நேரங்களில் நம்முடைய மனதை கவரும் வகையில் அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்து விடுகிறது. அப்படியாக திருவாரூரில் கீழவீதியில் இருக்கின்ற வீர ஆஞ்சநேயர் கோவிலில் புதன்கிழமை அன்று நடைபெற்ற வழிபாட்டில் பசு ஒன்று பங்கேற்றது.
அந்த நிகழ்வு தான் இன்று சமூக வலைதளங்களில் பரவி மக்களுடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது. திருவாரூரில் கீழவீதியில் இருக்கின்ற வீர ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி இரண்டு வேளையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் வெள்ளை நிற பசு ஒன்று கோவிலுக்குள் வந்து நீண்ட நேரமாக ஆஞ்சநேயரை பார்த்து படி நின்று கொண்டிருந்தது.

அந்த பசுவை அகற்ற சிலர் முயற்சித்த போதும் நகராமல் அங்கேயே நின்றது. பக்தர்கள் சிலர் பசுவை வழிபாடு செய்து வணங்கி சென்றனர். இதைவிட முக்கியமாக தொடர்ந்து தீபாரதனை காட்டும் வரை பொறுமையாக நின்ற பசு அதன் பிறகு தான் கோவிலை விட்டு வெளியே சென்றது.
இந்த காட்சியை அங்கு இருந்த ஒரு பக்தர் தன்னுடைய தொலைபேசியில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த காட்சி தான் தற்பொழுது மிகவும் வைரலாக பரவி ஆஞ்சநேயர் பக்தர்களை கவர்ந்திருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |