நாளைய ராசிபலன் (07-10-2026)
மேஷம்:
சமுதாய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தந்தையை பற்றிய சிந்தனை அவப்பொழுது வந்து மறையும். கல்வி பணியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.
ரிஷபம்:
எதிலும் கவனத்துடன் செயல்படுவது அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். வரவிற்கு ஏற்ப செலவும் இருக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
மிதுனம்:
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சை கடைபிடிப்பது அவசியம். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழப்பங்கள் விலகும்.
கடகம்:
புதிய வேலைக்கான சிந்தனை வரலாம். சேமிப்பு தொடர்பான சிந்தனையில் இருந்த குழப்பம் நீங்கும். தற்பெருமை இன்றி செயல்படுவது நன்மை தரும்.
சிம்மம்:
மனதில் இருந்த கவலைகள் விலகும். சகோதரர் வழியே நல்ல அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை சரியாக புரிந்து கொள்வீர்கள். புத்துணர்ச்சியான நாள்.
கன்னி:
விலகி சென்றவர்களை பற்றிய எண்ணம் வரலாம். சுதந்திர மனப்பான்மை சற்று அதிகம் இருக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படுவது அவசியம். மாற்றம் உண்டாகும்.
துலாம்:
தொழில் தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் நற்செய்தி வந்து சேரும். எதிர்பாராத பயணங்கள் நன்மை உண்டாக்கும்.
விருச்சிகம்:
வழக்கு விஷயங்களில் நுணுக்கமான செய்திகளை தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வரவு தொடர்பான செயல்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவசரமின்றி செயல்படுவது அவசியம்.
தனுசு:
இன்று காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்:
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். பணிகளில் திறமைகள் வெளிப்படும். நம்பிக்கை உருவாகும்.
கும்பம்:
ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். எந்த ஒரு செயல்களிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செய்வீர்கள். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்:
நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். தீர்க்கமான சிந்தனைகளால் தெளிவு பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |