நாளைய ராசிபலன் (02-08-2026)
மேஷம்:
குடும்பத்தில் ஒரு சில மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிதானமாகவும் தீவிரமாகவும் யோசித்து விஷயத்தை செய்வதால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
ரிஷபம்:
இன்று இவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். மனசோர்வு உண்டாகும். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவிடக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்:
இவர்களுக்கு இன்று காலை முதல் மனம் குழப்பமாக காணப்படும். வேலையில் சில தடைகள் மற்றும் குடும்பத்தில் திடீரென கசப்புகள் போன்ற சூழ்நிலை உருவாகலாம். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
கடகம்:
இன்று காலை முதல் மனம் என்ன செய்வதென்று தெரியாத விரக்தியை இருக்கக்கூடும். முடிந்தவரை மன அமைதிப்படுத்துவதற்கு தியானம் போன்ற விஷயங்களை ஈடபடலாம்.
சிம்மம்:
இன்று நீங்கள் முக்கியமான நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் உருவாகக்கூடிய நிலை வரலாம். முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.
கன்னி:
நீங்கள் முடிந்தவரை உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அவசியம். வெளியூர் செல்லும் பொழுது உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
இன்று காலை முதல் நீங்கள் உங்களுடைய வேலையில் கவனம் செலுத்தினால் மட்டுமே இன்றைய வேலை சரியாக முடியும். தேவை இல்லாத விஷயங்களில் மனம் செலுத்துவதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் போட்டி பொறாமைகளை விடுத்து நண்பர்களிடம் சகஜமாக பழகினால் மட்டுமே மன நிம்மதியை பெறலாம். வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை திட்டமிடக்கூடிய நாளாக அமையும்.
தனுசு:
இன்று காலை முதல் மனதில் மகிழ்ச்சி காணப்படும். குடும்பத்தில் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். பிள்ளைகளால் நீங்கள் பெருமை அடையக்கூடிய நாளாக இருக்கப்போகிறது.
மகரம்:
இன்று உடல் சோர்வு மனச்சோர்வு உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து சேரும். நீங்கள் நினைத்த செய்திகள் உங்கள் காதிற்கு வருவதால் இனிய நாளாக அமையப் போகிறது.
கும்பம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று அற்புதமான காலகட்டமாக அமையப் போகிறது. கோபத்தை மட்டும் தவிர்த்து விட்டால் இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.
மீனம்:
இன்று நீங்கள் யார் எப்படி என்று புரிந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். அமைதி காப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |