நாளைய ராசி பலன் (11-06-2026)
மேஷம்:
தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். உங்கள் பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
மனதில் குழப்பமும் சோர்வும் உண்டாகும். சிலரின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வேண்டிய நாள். இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் படிப்படியாக குறையும். தந்தை உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
முடிவுகள் எடுக்கும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகும்.
சிம்மம்:
சமுதாயத்தில் பெரியவர்களின் நட்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும்.
கன்னி:
வியாபாரம் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். போட்டி தேர்வுகளில் மாணவர்ளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர் உறவுகளில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
துலாம்:
இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும்.
விருச்சிகம்:
குழந்தைகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அத்தை வழி உறைவால் ஏற்பட்ட சிக்கல் விலகும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் நாள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு:
குழந்தைகளுக்காக நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரியவர்களின் உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகும்.
மகரம்:
உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் செய்வதில் சில சிக்கல் வர வாய்ப்புகள் உள்ளது. வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும்.
கும்பம்:
காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும். பெரியவர்களின் ஆதரவால் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றமும் அங்கீகாரமும் கிடைக்கும்.
மீனம்:
குடும்பத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குழந்தைகள் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |