நாளைய ராசிபலன் (24-09-2026)
மேஷம்:
குடும்பத்தினர் உடைய எண்ணங்களை நிறைவேற்றியவர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்:
வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை குறையும். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். கனிவான பேச்சாள் ஆதரவு உண்டாகும்.
மிதுனம்:
தம்பதிகளிடையே நல்ல புரிதல் கிடைக்கும். சுப செயல்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் முக்கியத்துவம் பெறுவீர்கள். மருத்துவத் துறைகள் சாதகமான வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். கடன் தொடர்பான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
சிம்மம்:
கணவன் மனைவி இடையே இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். தாய்மாமன் வழியில் சுப காரிய செலவுகளை சந்திப்பீர்கள். புதிய பொறுப்புகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும்.
கன்னி:
நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். சமூக பணிகளில் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
புதிய நபர்களின் அறிமுகத்தால் நல்ல மாற்றம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் கற்பனைகள் அதிகரிக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்:
மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். நெருங்கியவரிடம் மனம் விட்டு பேசக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றமான நாள்.
தனுசு:
சில பிரச்சனைகளுக்கு முடிவை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழுங்கள் மாற்றங்கள் உண்டாகும்.
மகரம்:
குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆர்வம் அதிகரிக்கும்.கும்பம்:
சூழலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவீர்கள். சிந்தனைகளில் ஒருவிதமான தடுமாற்றம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல் சந்திப்பீர்கள். பொறுமை வேண்டும்.
மீனம்:
அவசரமான முடிவுகளை தவிர்க்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |