நாளைய ராசி பலன் (18-08-2026)
மேஷம்:
இன்று காலை முதல் மனசோர்வு உடல் சோர்வு உண்டாகலாம். சிலருக்கு கோவில் வழிபாடுகளில் அதிக ஈடுபாடு வரும். உடன் பிறந்தவர்களிடம் கவனமாக பேசுவது அவசியம்.
ரிஷபம்:
திருமணம் உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க கவனம் வேண்டும். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும்.
மிதுனம்:
திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தாய்மாமன் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். சொத்துக்களில் கவனம் வேண்டும்.
கடகம்:
மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்துக் கொள்வீர்கள். நபர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தைகள் எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
வீடுகளில் திடீர் சுபநிகழ்ச்சிகளில் நடக்கும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாள். வழக்கு விஷயங்களில் சற்று நிதானம் கடைபிடித்து செல்வது அவசியம்.
கன்னி:
தேவை இல்லாத செலவுகள் குறைத்துக் கொள்வது அவசியம். பொருளாதாரம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். தந்தை உடல் நிலையில் கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று நற்செய்தி வந்து சேரும். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். சகோதரர்கள் வழியே உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வரன் நினைத்தது போல் கிடைக்கும்.
தனுசு:
குழந்தைகளால் உங்களுக்கு பெறுமை சேரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் உள்ள தடை விலகும். மனசோர்வு விலகும். நண்பர்களை சந்திப்பீர்கள்.
மகரம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெருங்கியவரை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள்.
கும்பம்:
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் சந்தித்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.
மீனம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் உள்ள தடை விலகும். மனதில் உள்ள கவலைகள் விலகும். சொந்தங்கள் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |