நாளைய ராசிபலன் (11-04-2026)
மேஷம்:
வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
ரிஷபம்:
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
மிதுனம்:
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் நாள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்து கசப்புகள் நீங்கி விவேகமாக செயல்படுவீர்கள்.
கடகம்:
மறைமுகமான விமர்சனங்கள் தோன்றும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு மறதி உண்டாகலாம். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உங்களுடைய காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி ஊக்கமாக செயல்படுவீர்கள்.
கன்னி:
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் .
துலாம்:
தாய் வழி உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். இன்று வேலையில் மனநிறைவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் வந்து செல்லும். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
இன்று மனதளவில் தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் பொழுது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத விஷயம் நல்ல முடிவை பெறும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
இன்று உங்களுடைய குண நலன்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். காதல் வாழ்க்கையில் சில பயம் உண்டாகலாம்.
கும்பம்:
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் வழியே சேமிப்புகள் உயரும். பிறமொழி பேசும் மனிதர்களிடம் சற்று கவனமாக பேச வேண்டிய நாள்.
மீனம்:
வாழ்க்கையில் புதிய தேடல்களை நோக்கி பயணம் செல்வார்கள். அரசு காரிய தொடர்பான இழுபறிகள் விலகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஆதாயம் கிடைக்கும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |