நாளைய ராசிபலன் (17-08-2026)

Report

மேஷம்:

இன்று நீங்கள் பூர்வீக இடத்திற்கு சென்று நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்:

வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். திருமணத்தில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

மிதுனம்:

வழக்கு ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். எதிரிகள் தொல்லையால் சில மனக்கசப்புகள் வரலாம். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் வேண்டாம்.

வெள்ளிக்கிழமை அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன?

வெள்ளிக்கிழமை அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன?

கடகம்:

இன்று நண்பர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். யாரிடமும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

சிம்மம்:

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு தொந்தரவு செய்தவர் விலகிச் செல்வார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

பொருளாதார விஷயங்களில் இன்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கலாம். தாய் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.

துலாம்:

வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். நீண்ட நாட்களாக கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

விருச்சிகம்:

இன்று வாழ்க்கை துணையுடன் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.

தனுசு:

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.

மகரம்:

வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்:

தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் நன்மைகளை பெறுவீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்:

சொந்தங்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். வழக்கு விஷயங்களில் நீங்கள் முக்கிய நபர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். தொலைதூரம் பயணம் செல்லும் பொழுது உடைமைகளில் கவனம் வேண்டும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US