இன்றைய ராசி பலன்(16-12-2025)
மேஷம்:
சிலருக்கு வாழ்க்கையை பற்றி புரிதல் உண்டாகும். மனதில் நிம்மதி தோன்றி மறையும் நாள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும் நாள்.
ரிஷபம்:
தேவை இல்லாமல் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். மறைமுக எதிரிகள் தொல்லையால் சில சங்கடம் சந்திப்பீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். திருமணம் தொடர்பான பேச்சுகளில் கவனம் அவசியம். பெற்றோர்கள் உடல்நிலையில் சில தடுமாற்றம் உண்டாகலாம்.
கடகம்:
காலை முதல் தேவையில்லாத சிந்தனைகள் மனதில் வந்து செல்லும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
சிம்மம்:
தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த போட்டி விலகும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணும் நாள். முடிந்தவரை தற்பெருமைகளை பேசாதீர்கள். நெருங்கிய உறவுகளால் மன வருத்தம் வரலாம்.
கன்னி:
இன்று திருமணம் தொடர்பான பேச்சுக்களில் உங்களுக்கு ஒரு சில குழப்பங்களும் மனவருத்தமும் தோன்றலாம். குடும்பத்தினர் அணுகுமுறைகளால் நீங்கள் எரிச்சல் அடைவதை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
வாழ்க்கையை பற்றிய ஒரு முக்கியமான முடிவு எடுக்கக்கூடிய நாள். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். மதியமேல் உடல் சோர்வு உண்டாகலாம்.
விருச்சிகம்:
நீண்ட நாட்களாக மருத்துவ ரீதியாக சந்தித்து வந்த தொல்லைகள் யாவும் விலகும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நாள். பிடிவாதத்தை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.
தனுசு:
உடன் பிறந்தவர்களால் ஒரு சிலருக்கு மன வருத்தம் வரலாம். பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதால் நன்மை உண்டாகும்.
மகரம்:
வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவினர்களிடையே உங்களுடைய மதிப்பு உயரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நன்மையான நாள்.
மீனம்:
சொந்தங்கள் மத்தியில் நீங்கள் சுயமாக முடிவெடுத்து முன்னேறிச் செல்லக்கூடிய நாள். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |