வீடுகளில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த 8 தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் துளசி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்துக்கள் அனைவரது வீட்டிலும் துளசி செடிகள் இருப்பதை பார்க்கலாம்.
அப்படியாக துளசி செடியை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு 8 தவறை மட்டும் துளசி செடி வைத்து வழிபாடு செய்பவர்கள் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. துளசிச் செடியை வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் எப்பொழுதும் சுத்தமாக குளித்துவிட்டு பிறகு தான் வழிபாடு செய்ய வேண்டும்.
2. அதேபோல் துளசி இலைகளை நாம் எல்லா நேரங்களிலும் பறித்து விட கூடாது. துளசி இலையை கட்டாயமாக ஏகாதசி, அமாவாசை அல்லது இன்னும் குறிப்பிட்ட சில முக்கியமான தினங்களில் துளசி இலைகள் பறிப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.
மேலும் தேவை இல்லாத நேரங்களிலும் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. மருத்துவ ரீதியாக அல்லது ஆன்மீக தேவை இருக்கும் பொழுது சரியான நேரத்தில் பறித்து வழிபாடு செய்வது மட்டுமே உகந்ததாகும்.
3. சிலர் துளசி செடியை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அடிக்கடி தண்ணீர் ஊற்றி விடுவார்கள். ஆனால் துளசி செடிக்கு தேவையான நேரங்களில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தாலே போதுமானது.
அதிக அளவில் நாம் தண்ணீர் ஊற்றும் பொழுது நிச்சயம் செடிக்கு பாதிப்பை கொடுக்கும். ஆதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்யலாம். அதே போல் துளசி செடிக்கு ஊற்றுகின்ற தண்ணீர் நிச்சயம் சுத்தமாக இருக்க வேண்டும்.

4. துளசி செடியை வைத்து வழிபாடு செய்வதற்கு என்று உகந்த திசை இருக்கிறது. அந்த திசையில் தான் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நேர்மறை ஆற்றில் பெருகும். துளசி செடியை எக்காரணத்தைக் கொண்டும் கழிவறை அருகிலும் அல்லது மாடிப்படிகள் ஏறுவதற்கு அடியிலும் வைக்கக் கூடாது. துளசி செடியை வைக்கும் பொழுது கட்டாயமாக சூரிய வெளிச்சம் அதிக அளவில் விழும் படி தான் நாம் வைக்க வேண்டும்.
5. துளசி செடிக்கு முன்பாக விளக்கேற்றும் பொழுது நிச்சயம் உடைந்த விளக்குகளை கொண்டு விளக்கேற்ற கூடாது. அதேபோல் செயற்கை பூக்கள் சமர்ப்பித்தும் வழிபாடு செய்யக் கூடாது. வீடுகளில் செய்யக்கூடிய இனிப்பு பலகாரம் போன்றவற்றை நெய் வைத்தியமாக வைத்து படைக்கலாம்.
6. துளசி செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால் அதை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். காய்ந்த இலைகள் துளசி செடிகளில் இருக்கும் பொழுது நிச்சயமாக அது நமக்கு ஒரு எதிர்மறை ஆற்றலை கொடுத்து விடும்.
7. துளசி செடியை எப்பொழுதும் நாம் ஒரு மரியாதையோடு கையாள வேண்டும். வீடுகளில் இருக்கக்கூடிய குழந்தைகள் விளையாட்டு போக்கில் துளசி இலைகளை பறித்து விளையாடுவதை நாம் அவர்களுக்கு பரிந்துரைக்கக் கூடாது.
துளசி செடியானது தெய்வத்திற்கு சமமானது என்றும் அது மகாலட்சுமி அம்சம் என்றும் அதை போற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்கின்ற ஒரு நல்ல பண்பை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து குழந்தைகளுக்கும் துளசி செடி வழிபாட்டு மகிமைகளை நிச்சயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
8. துளசி செடி வைத்திருப்பவர்கள் கட்டாயமாக மனப்பூர்வமாக அதை தெய்வமாக போற்றி வழிபாடு செய்ய வேண்டும். கடமைக்காக துளசி செடியை வீடுகளில் இருக்கிறது என்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் கூடாது. வழிபாடு செய்யும் போது மந்திரங்களை பாராயணம் செய்தும் நம்முடைய மனம் தூய்மையாக வைத்தும் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் நாம் வழிபாடு செய்வது அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |