நாளைய ராசி பலன் (03-02-2026)
மேஷம்:
நண்பர்களுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். அலுவலகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு சில தாமதத்தை சந்திக்கலாம்.
ரிஷபம் :
மனதில் புதுவிதமான நம்பிக்கைகள் மலரும். உங்களுடைய பேச்சுத் திறமையால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பங்களை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
மிதுனம்:
இன்று புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் மனதில் இருக்கக்கூடிய ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
கடகம்:
உணவு சார்ந்த விஷயங்களில் இன்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக புதிய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். வண்டி வாகனத்தில் பயணிக்கும் பொழுது நிதானம் தேவை.
சிம்மம்:
இன்று நீங்கள் சேமிப்பு தொடர்பாக ஒரு சில விஷயங்களை பின்பற்றுவீர்கள். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். வெளியூருக்கு செல்லும் பொழுது உடைமைகளில் கவனம் வேண்டும்.
கன்னி:
தொழில் சார்ந்து சில குழப்பங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டு நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். அண்ணன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.
துலாம்:
இறை சிந்தனையும் இறை பணிகளிலும் இன்று ஈடுபாடு செலுத்துவீர்கள். வழக்கு விஷயங்களில் நுணுக்கமான புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். சற்று செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
காலை முதல் மந்தமான மனநிலையில் இருப்பீர்கள். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். மனதில் ஆடம்பர சிந்தனைகள் அதிகரிக்கும். தாயிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
தனுசு:
நண்பர்கள் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். குழந்தைகளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
மகரம்:
பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள். உங்களின் இனிமையான பேச்சு பிறருடைய மனதை கவரும் விதத்தில் அமையும். இலக்கியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
கும்பம்:
உங்களின் தனி திறமை வெளிப்படும். மறைமுகமான எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். விவாதங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பிடித்தவர்கள் இடத்தில் இருந்து அன்பு கிடைக்கும்.
மீனம்:
இன்று நீங்கள் செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகும். அரசு சார்ந்த ஆவணங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |