இன்றைய ராசி பலன் (04-02-2026)

Report

 மேஷம் :

இன்று உடல் சோர்வு உண்டாகலாம். நண்பர்களிடம் உங்களின் சொந்த விஷயங்களை பகிரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும்.

ரிஷபம் :

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உடன் பணிபுரிபவர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வரலாம். மனதில் நிதானம் இழந்து காணப்படும்.

மிதுனம்:

இன்று வீட்டில் பெரியவர்களின் உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். நிலம் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள்.

கடகம்:

வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

சிம்மம்:

இன்று வீண் கோபம் உண்டாகும். மனம் காலை முதல் எரிச்சலுடன் காணப்படும். ஆதலால் தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது நன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் விலகும்.

கன்னி:

உங்களின் திறமை வெளிப்படும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

துலாம்:

மனதில் அமைதி உண்டாகும். உங்களின் வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய நட்புகள் மலரும். உங்களை புரியாமல் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.

விருச்சிகம்:

இன்று போட்டி மனப்பான்மையில் எதையும் செய்யாதீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அதிகம் ஆர்வம் உண்டாகும். பெற்றோர்களிடம் நிதனமாக பேசுவது அவசியம். நன்மையான நாள்.

தனுசு:

பிள்ளைகள் பற்றி பெருமை உண்டாகும். வாழ்க்கை துணை உஙகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள்.

மறந்தும் இந்த நாட்களில் ஜாதகம் பார்க்க செல்லாதீர்கள்?

மறந்தும் இந்த நாட்களில் ஜாதகம் பார்க்க செல்லாதீர்கள்?

மகரம்:

எதிர்பாராத மனிதர்களின் சந்திப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் விலகும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள்.

கும்பம்:

இன்று வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள்.

மீனம்:

பிள்ளைகள் பற்றிய பெருமை உண்டாகும். சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US