நாளைய ராசி பலன் (09-02-2026)
மேஷம்:
இன்று தொழில் தொடர்பான குழப்பங்களை சந்திப்பீர்கள். சிலருக்கு வங்கி தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கவனக்குறைவால் ஒரு சில பொருட்களை தொலைக்க நேரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
சுற்றி உள்ளவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பரிசு பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். மதியம் மேல் அமைதி உண்டாகும்.
மிதுனம்:
பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வேலையில் ஒரு சில சிக்கலை சந்திக்கலாம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
கடகம்:
இன்று மனரீதியாக சில குழப்பங்கள் உண்டாகி மறையும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் இல்லாமல் படிக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
சிம்மம்:
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
திருமணம் தொடர்பான விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் விலகும். சொந்தங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் இருந்து வந்த சிக்கல் விலகும். எதிர்பாராத நபரின் சந்திப்பு கிடைக்கும்.
துலாம்:
நீண்ட நாள் மன அழுத்தத்திலிருந்து விடுபட போகிறீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய நட்புகளில் அறிமுகம் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே அமைதியான சூழல் உண்டாகும். சொந்தங்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். குழந்தை தொடர்பான விஷயங்களில் இருந்து சிக்கல் விலகும்.
தனுசு:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். பொருளாதாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்ளலாம்.
மகரம்:
நண்பர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களால் சில மன கசப்புகள் உண்டாக்கலாம். வேலையில் கவனம் செலுத்த வேண்டும். பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்:
உடல் சோர்வு உண்டாகும். மதியம் மேல் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகளை பெறுவீர்கள். சேமிப்பு செய்வது பற்றி ஆலோசனை உண்டாகும். மாலை மேல் குழந்தைகளிடம் நேரம் செலவு செய்வீர்கள்.
மீனம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை உண்டாக்கும். சொந்த ஊரில் சிந்தித்த பிரச்சனை விலகும். சகோதரி வழி உறவால் சில சிக்கல் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |