நாளைய ராசி பலன் (11-02-2026)
மேஷம்:
இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்க போகிறது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்லகூடிய நிலை வரலாம். தொழில் ரீதியாக நீங்கள் மிக பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். நன்மையான நாள்.
ரிஷபம்:
நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். சிலருக்கு ஆன்மீக சிந்தனை மனதில் சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
மிதுனம்:
குடும்பத்தில் இருந்து வந்த கசப்புகள் விலகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் முடிவு எடுப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
கடகம்:
மனதில் எதையும் தீர ஆலோசித்து முடிவு முடிவு செய்ய வேண்டும். தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தை உயர்த்துவதை பற்றி யோசிப்பீர்கள்.
சிம்மம்:
தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கலை சரி செய்வீர்கள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். மாலை மேல் நட்புகளை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். நன்மை அடையும் நாள்.
கன்னி:
தந்தை உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு வேலை தொடர்பாக சில பதட்டம் உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரி வழி உறவால் நன்மைகள் நடக்கும்.
துலாம்:
மனதில் நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில் இருந்து வந்த குழப்பம் விலகும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். சிலரின் உண்மை முகத்தை பற்றி தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொள்வீர்கள்.
தனுசு:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள்.
மகரம்:
வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசு வழியே ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
வாங்கிய கடனை அடைக்கும் யோகம் பெறுவீர்கள். குடும்பத்தினர் இடையே வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
திடீர் என்று வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்களிடம் வம்பு செய்தவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலை வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |