நாளைய ராசி பலன் (14-02-2026)

Report

 மேஷம்:

இன்று முக்கிய நபரின் சந்திப்புகளை பெருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உங்களை தொந்தரவு செய்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள், நன்மையான நாள்.

ரிஷபம்:

உடல் சோர்வு விலகும். வங்கி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குழப்பங்கள் விலகும்.

மிதுனம்:

வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் நடைபெறும். செலவு செய்வதில் சிக்கனமும் கவனமும் செலுத்த வேண்டும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் பேசுவார்கள்.

2026: மகாசிவராத்திரி நாளில் சதுர்கிரக யோகம்.. இந்த ராசிகள் அதிர்ஷ்டம் பெறுவது உறுதி

2026: மகாசிவராத்திரி நாளில் சதுர்கிரக யோகம்.. இந்த ராசிகள் அதிர்ஷ்டம் பெறுவது உறுதி

கடகம்:

மனதில் தேவை இல்லாத சிந்தனைகள் வந்து செல்லும். உங்களின் பெருமைகளை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகள் உடலில் அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:

தந்தைக்கும் உங்களுக்கும் வாக்கு வாதம் வரலாம். வாழ்க்கையின் மீது விரக்தி நிலை உண்டாகி மறையும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். பொழுது போக்கு விஷயத்தில் பங்கு கொள்வீர்கள்.

கன்னி:

உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். பிடித்த விஷயங்களை செய்வீர்கள்.

துலாம்:

இன்று உடல் நிலையில் சிறு சிறு தொந்தரவு வந்து மறையும். குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து கொடுப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும். வழக்கு விஷயங்கள் பதட்டம் உண்டு செய்யும்.

விருச்சிகம்:

உங்களிடம் வீண் வாக்கு வாதம் செய்தவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். வருமானத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

நாளை சனி பிரதோஷ விரதம்.. சனியின் தாக்கம் குறைய இதை செய்ய மறக்காதீர்கள்

நாளை சனி பிரதோஷ விரதம்.. சனியின் தாக்கம் குறைய இதை செய்ய மறக்காதீர்கள்

தனுசு:

பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். திடீர் மருத்துவ செலவுகள் சந்திக்கலாம். குலதெய்வ வழிபாட்டில் பங்கு கொள்வீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம்:

இன்று நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வந்து செல்லும். உயர் அதிகாரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

கும்பம்:

பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

வழக்கு தொடர்பாக இருந்து வந்த பிரச்சனை நல்ல முடிவை பெரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வேலை பளு அதிகரிக்கும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US