நாளைய ராசி பலன் (20-02-2026)

Report

மேஷம்:

உறவினர்களால் சில தொந்தரவுகளை சந்திக்கலாம். மனதில் குழப்பமும் பயமும் உண்டாகும். எதையும் தீர ஆலோசனைத்து முடிவெடுப்பதால் நன்மை உண்டாகும். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

ரிஷபம்:

இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். திடீர் என்று தொலைதூர பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாள். வழக்கு விஷயங்கள் திடீரென்று உங்களுக்கு எதிராக செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை.

கடகம்:

பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலைகள் விலகும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் சில குழப்பமான நிலை உண்டாகலாம். உடல் சோர்வு மற்றும் மன சோர்வு காணப்படும்.

சிம்மம்:

வியாபாரத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். மதியம் மேல் நற்செய்தி கிடைக்கும்.

தவறியும் இந்த 5 விஷயங்களை வீடுகளில் செய்யாதீர்கள்.. கடன் பிரச்சனை வருமாம்

தவறியும் இந்த 5 விஷயங்களை வீடுகளில் செய்யாதீர்கள்.. கடன் பிரச்சனை வருமாம்

கன்னி:

வேலை தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனமும் ஈடுபாடும் செலுத்த வேண்டும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

துலாம்:

இன்று காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். ஒரு முக்கியமான முடிவை எடுப்பதில் சில குழப்பங்களை சந்திப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

விருச்சிகம்:

சொந்தங்கள் மத்தியில் நீங்கள் நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம்.

தனுசு:

புதிய பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குழந்தைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

ருத்ராட்சத்தை தவறியும் இந்த நிற நூலில் மட்டும் அணியாதீர்கள்

ருத்ராட்சத்தை தவறியும் இந்த நிற நூலில் மட்டும் அணியாதீர்கள்

மகரம்:

நிலம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்தி விடுங்கள்.

கும்பம்:

சொந்த வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வேலை பளூ குறையும்.

மீனம்:

இன்று பிள்ளைகள் மீது கவனமும் அக்கறையும் செலுத்துவீர்கள். உங்களுக்கு நெருங்கிய நபர்களிடம் நீங்கள் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிலரின் உண்மை முகம் புரியவரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US