நாளைய ராசி பலன் (13-02-2026)

Report

மேஷம்:

இன்று வயிறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள். மாலை மேல் மனம் அமைதி பெரும்.

ரிஷபம்:

வழக்கு விஷயங்களில் கவனத்தோடு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும் நாள். தந்தை உடல் நிலையில் கவனம் வேண்டும்.

மிதுனம்:

வேலை ரீதியாக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் நீங்கள் நம்பியவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் எல்லாம் விலகும்.

வாஸ்து: அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் வைக்க வேண்டிய 5 முக்கியமான ஓவியங்கள்

வாஸ்து: அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் வைக்க வேண்டிய 5 முக்கியமான ஓவியங்கள்

கடகம்:

இன்று உங்களுக்கு முக்கியமான நாள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். பண வரவு அதிகரிக்கும்.

சிம்மம்:

குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிடித்த புத்தகம் அல்லது வேலை செய்து மகிழும் நாள். வாழ்க்கை துணையின் வழியாக நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் சந்தித்த சிக்கலை சரி செய்வீர்கள்.

கன்னி:

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனை விலகும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டாகும்.

துலாம்:

இன்று உங்களுக்கு வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். சம்பள உயர்வு பற்றி அலுவலகத்தில் ஆலோசனை செய்வீர்கள்.

வாஸ்து : வீடுகளில் படுக்கைக்கு எதிரே கழிப்பறை இருந்தால் கவனமாக இருங்கள்

வாஸ்து : வீடுகளில் படுக்கைக்கு எதிரே கழிப்பறை இருந்தால் கவனமாக இருங்கள்

விருச்சிகம்:

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள். மனதில் உள்ள குழப்பங்களுக்கு நல்ல விடை கிடைக்கும். வாழ்க்கை துணையின் குடும்பத்தினரிடம் இருந்து ஆறுதல் கிடைக்கும். திருமண வரன் நீங்கள் நினைத்தது போல் நடக்கும்.

தனுசு:

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய் வழி உறவுகளால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் நாள். உடன் பிறாந்தவர்களை சந்திப்பீர்கள்.

மகரம்:

வேலையில் ஒரு வித விரக்தி நிலை உண்டாகும். மனம் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பிடித்த விஷயங்களை செய்து மகிழும் நாள்.

கும்பம்:

இன்று சிலர் புதிய ஆடை பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும் நாள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும் நாள்.

மீனம்:

நீண்ட நாளாக சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனை விலகும். உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செல்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US