இன்றைய ராசி பலன்(05-01-2026)

Report

மேஷம்:

உறவுகளிடையே இன்று விட்டுக் கொடுத்து போகக்கூடிய ஒரு பக்குவம் வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு உண்டாகலாம். ஒரு சிலர் வாகனங்கள் மாற்றுவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

ரிஷபம்:

இன்று சவாலான வேலைகளை கூட நீங்கள் சாதாரணமாக செய்து முடித்து பாராட்டுகளை பெற்று விடுவீர்கள். பூர்வீக இடத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கக்கூடிய நாள்.

மிதுனம்:

உறவினர்கள் உங்களுக்கு எதிர்பாராத ஆதரவுகளை கொடுக்கப் போகிறார்கள். பணவரவை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும் நாள்.

கடகம்:

உங்கள் குண நலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகள் உங்களை இன்று காயப்படுத்தலாம். தடையை மீறி வெற்றி பெறுவதற்கு போராடுவீர்கள். எதிரிகள் விலகுவார்கள்.

சிம்மம்:

இன்று எதிர்ப்பாராத செலவுகளால் பண சேமிப்புகள் குறையலாம். உடன் பிறந்த சகோதரர்களிடம் நீங்கள் மிகுந்த கவனத்துடன் பேசுவது அவசியம். வெளியூர் பயணங்களில் உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள்.

2026 ஜனவரி 4 நடக்கும் புதன் பெயர்ச்சி: பேச்சு திறனால் சாதிக்க போகும் 4 ராசிகள்

2026 ஜனவரி 4 நடக்கும் புதன் பெயர்ச்சி: பேச்சு திறனால் சாதிக்க போகும் 4 ராசிகள்

 

கன்னி:

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ கூடிய அற்புதமான நாள். சிலர் சமூக பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் சிறப்பாக முடியும். மனதில் அமைதி உண்டாகும்.

துலாம்:

ஆன்மீக பணிகளில் பங்கு கொள்வீர்கள். எதிர்பாராத விதமாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முக்கியமான நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் விலகும்.

விருச்சிகம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் உங்களுக்கு அதிகரிக்கலாம். கவனம் வேண்டும்.

தனுசு:

எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டாகும். நண்பர்களிடத்திலிருந்து நீங்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும். மனதளவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சிவன் ஏன் ஆபத்தான கடவுள் ? இது தெரியாமல் அவரை வழிபாடு செய்யாதீர்கள்

சிவன் ஏன் ஆபத்தான கடவுள் ? இது தெரியாமல் அவரை வழிபாடு செய்யாதீர்கள்

மகரம்:

தாய் வழி உறவுகளால் உங்களுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும். வங்கி சார்ந்த விஷயங்களில் இருந்த சங்கடங்கள் விலகும். மனதில் இன்பம் நிறைந்திருக்கும். நன்மையான நாள்.

கும்பம்:

இன்று நினைத்த வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலை தொடர்பாக புதிய அனுபவங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்:

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களும் வருத்தங்களும் உண்டாகலாம். நெருங்கிய உறவுகளைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் எளிதாக முடிந்துவிடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US