நாளைய ராசி பலன் (18-01-2026)

Report

 மேஷம்:

புதிய விஷயங்களை தேடி படிப்பீர்கள். நண்பர்களுடன் இனிமையான பொழுதுபோக்கு நேரத்தை செலவிட கூடிய வாய்ப்பு உருவாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்:

வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் அல்லது ஆன்மீக சுற்றுலா பயணம் செல்வீர்கள். உடல்நிலை சந்தித்து வந்த குறைபாடுகள் விலகும்.

மிதுனம்:

வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முயற்சிப்பீர்கள். தாய் உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்:

இன்று யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நட்பு வட்டாரங்களில் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

சிம்மம்:

தொழில் ரீதியாக சில மன வருத்தம் வரலாம். பொருளாதாரத்தில் திடீர் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறக்கூடிய நாள்.

கன்னி:

வேலையில் மன அழுத்தங்களை சந்திக்க கூடிய நாள். வெளியில் செல்லும் பொழுது வண்டி வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு பல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

பொங்கல் முடிந்த கையோடு குரு பகவானால் உருவாகும் சிறப்பு ராஜயோகம்- அதிர்ஷ்டம் யாருக்கு

பொங்கல் முடிந்த கையோடு குரு பகவானால் உருவாகும் சிறப்பு ராஜயோகம்- அதிர்ஷ்டம் யாருக்கு

துலாம்:

குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதையும் ஆதரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அதிகாரிகள் முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

கணவன் வழி உறவுகளால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்த சகோதரிகளின் வழியே பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.

தனுசு:

இன்று உங்களை சுற்றி உள்ள நபர்களுடைய உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். துணிச்சலாக ஒரு முடிவு எடுக்கக் கூடிய அற்புதமான நாள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகர ராசியில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்.. ஜாக்பாட் அடிக்க போகும் 4 ராசிகள்

மகர ராசியில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்.. ஜாக்பாட் அடிக்க போகும் 4 ராசிகள்

மகரம்:

வீடுகளில் இருந்த பிரச்சனைகள் விலகும். காதல் வாழ்க்கையில் ஒரு நல்ல இனிமையான சூழ்நிலை உருவாகும். மருத்துவ செலவுகள் விலகும். வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர பொருட்களை ஒரு சிலருக்கு வாங்கும் யோகம் உண்டாகும். நன்மையான நாள்.

மீனம்:

வீடுகளில் உங்களுக்கு சில பிரச்சனை வரலாம். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில் பளு உண்டாகும். உணவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US