நாளைய ராசி பலன்(23-01-2026)
மேஷம்:
இன்று மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வந்து செல்லும். வேலைக்காக திடீர் அலைச்சல் உண்டாகும். உணவு விஷ்யங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்:
இன்று சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்வீர்கள். வீண் பிடிவாதம் தவிர்ப்பது நல்லது. புதிய விஷயங்களை தேடி கற்று கொள்வீர்கள். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.
மிதுனம்:
பிறரின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். இன்று வேலை ரீதியாக புதிய அனுபவங்களை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி பெறுவீர்கள்.
கடகம்:
வேலை செய்யும் இடங்களில் சில மன சங்கடமான நிலை வரலாம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழி உறவால் நீங்கள் சந்தித்த சங்கடம் விலகும்.
சிம்மம்:
உங்களை விட்டு பிரிந்து சென்றவர்களை பற்றி நினைத்து பார்ப்பீர்கள். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி:
மனதில் புது விதமான சிந்தனை தோன்றும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
துலாம்:
இன்று உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். எதிர்ப்பாராத பயணம் உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களின் திறமை வெளிப்படும் நாள்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் மனதில் சந்தித்த குழப்பங்களுக்கு விடை தேடித் கொள்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதையும் பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நல்லது.
தனுசு:
குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மனதில் பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் உண்டாகும். உங்களின் தனித்திறமை வெளிப்படும். ஓய்வு எடுக்கக்கூடிய நாள்.
மகரம்:
தொழில் நீங்கள் நினைத்தது போல் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் செயல்களில் இருந்த குழப்பங்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
கும்பம்:
இன்று நீங்கள் நண்பர்களை சந்தித்து மன மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். சிலர் புதிய ஆடை வாங்கி மகிழும் நாள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நன்மையான நாள்.
மீனம்:
அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நண்பர்களின் பிரச்சனைக்கு நீங்கள் உதவி செய்யும் நிலை வரும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |