நாளைய ராசிபலன் (29-01-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள் நன்மையான நாள்.

ரிஷபம்:

காலை முதல் உடல் சற்று சோர்வாக காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு நல்ல ஆறுதலாக இருப்பார். தாய்மாமன் வழி உறவுகளால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.

மிதுனம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய மகிழ்ச்சியான நேரத்தை நண்பர்களுடன் செலவிடுவீர்கள். சுயநலமாக ஒரு முடிவெடுப்பதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கடகம்:

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உறவுகள் இடையே ஏற்பட்ட விரிசல் சரியாகும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மதியமேல் வேலை பளு அதிகரிக்கலாம்.

எல்லா விஷயங்களையும் தவறாகவே புரிந்து கொள்ளும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?

எல்லா விஷயங்களையும் தவறாகவே புரிந்து கொள்ளும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?

சிம்மம்:

எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்வீர்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

கன்னி:

வேலைக்காக திடீரென்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தாய் உடல் நிலையில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.

துலாம்:

இன்று மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீக சிந்தனை உண்டாகும்.

விருச்சிகம்:

காலை முதல் மனம் சுற்று பதட்டமாகவே காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படலாம். மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள்.

தனுசு:

இன்று பிள்ளைகள் வழியே பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு நினைத்த அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்குவீர்கள்.

வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக தங்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக தங்க என்ன செய்ய வேண்டும்?

மகரம்:

காதல் வாழ்கையில் சில கசப்புகள் உண்டாகலாம். வேலைப்பளு காரணமாக பதட்டம் உண்டாகும். பெற்றோர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கும்பம்:

இன்று குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். நீண்ட நாள் உங்கள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். பொழுதுபோக்கு விஷயங்களில் மாலை மேல் பங்கு கொள்வீர்கள்.

மீனம்:

பிள்ளைகளைப் பற்றி பெருமை அடையக்கூடிய நாள். தொழில் ரீதியாக சில எதிர்ப்புகளையும் போட்டியாளர்களையும் சந்திப்பீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US