நாளைய ராசி பலன் (21-03-2026)
மேஷம்:
இன்று சிறுதொழில் செய்பவர்களுக்கு பொன்னான நாளாக இருக்க போகிறது. வழக்கு தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். போட்டி பொறாமைகளால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்:
ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பு உயரும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும்.
மிதுனம்:
தொழில் தொடர்பாக நீங்கள் ஒரு சிலரின் ஆலோசனையை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார கஷ்டம் விலகும்.
கடகம்:
இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். வீடுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரமும் மதிப்பும் உயரும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.
சிம்மம்:
நண்பர்களை சந்தித்து சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
கன்னி:
இன்று குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உறவினர்களிடம் பேசும் பொழுது தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
துலாம்:
குடும்பத்தில் உறவினர்களுடைய வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கு கொள்வீர்கள். நெருங்கியவர்களின் அன்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று நிர்வாக பணிகளில் நீங்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். எதிர்ப்புகள் விலகும் நாள்.
தனுசு:
இன்று உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் சில மாறுதல்களை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
மகரம்:
இன்று தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். தொழில் ரீதியாக முன்னேற்றமும் கிடைக்கும் நாள்.
கும்பம்:
இன்று மனதளவில் புதுவிதமான நம்பிக்கையை பெறுவீர்கள். விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். சுற்றி உள்ளவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்ள நேரலாம்.
மீனம்:
சொந்தங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை உயரும். உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |