நாளைய ராசிபலன் (08-10-2026)
மேஷம்:
சில எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். மனதில் தடுமாற்றங்கள் விலகும்.
ரிஷபம்:
தொழிற்சார்ந்த கல்வியில் சாதகமான நிலை உண்டாகும். சொந்த ஊர் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வீடு வாங்குவதை பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்:
சகோதரர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். குழந்தைகள் வழியே நல்ல அணுகூலம் இருக்கும். போட்டி பொறாமைகள் விலகும்.
கடகம்:
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
அரசு வழியே இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். மனதில் புதிய சிந்தனை வளரும். கடன் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நெருக்கடி விலகும்.
கன்னி:
எதிர்பாராத வரவு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில சிக்கல் வரலாம்.
துலாம்:
உங்களுக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதுரியத்தால் சில தடைகளை வெற்றி காண்பீர்கள். திட்டமிட்ட செயலை மாற்றி அமைப்பீர்கள். அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம்:
சமூகப் பணிகளில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் விலகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
தனுசு:
மனதில் உறுதி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்கள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்:
மனதில் புரியாத சிந்தனைகள் உண்டாகலாம். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
கும்பம்:
வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். கற்பனைத் துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்:
மறதி சார்ந்த பிரச்சனைகள் விலகும். புதுவிதமான ஆலோசனைகளை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |