இன்றைய ராசிபலன் (06-10-2026)
மேஷம்:
அலைச்சல் உண்டாகலாம். பயணங்களில் நிதானம் தேவை. தாயார் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
ரிஷபம்:
எதையும் சாதிக்க கூடிய தைரியம் பிறக்கும். வருகின்ற பிரச்சனையை எளிதாக சமாளிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். சுறுசுறுப்பான நாள்.
மிதுனம்:
எதிர்பார்த்த பண வரவு உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும். பேச்சில் இனிமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
கடகம்:
முடிவுகளில் தெளிவு கட்டாயமாக தேவை. உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணை வீட்டாருடன் அனுசரித்து செல்லவும்.
சிம்மம்:
சுப காரியங்கள் உண்டாகலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் தூக்கமின்மையால் பிரச்சனைகள் வரலாம்.
கன்னி:
தொட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். பல வழிகளில் பண வரவு உங்க கைகளுக்கு வந்து சேரும். மகிழ்ச்சியான நாளாக இருக்கப்போகிறது.
துலாம்:
வேலையில் உங்களுடைய மதிப்பு உயரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
ஆன்மிக ஈடுபாடு உங்களுக்கு அதிகரிக்கும். தந்தை வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.
தனுசு:
இன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதும் அவசியம். துணை வழி மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
மகரம்:
கூட்டுத் தொழில் நல்ல லாபம் உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டாகக்கூடிய நாள். வெளிநாடு செல்லும் யோகம் வரலாம்.
கும்பம்:
தடைகள் யாவும் விலகும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
மீனம்:
குழந்தைகள் வழியே மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனை நீங்கும்.