நாளைய ராசி பலன் (27-12-2025)
மேஷம்:
குடும்பத்தில் இன்று நீங்கள் சற்று பொறுமையாக சொல்வது அவசியம். வேலையில் கடினமான உழைப்புகளை போட வேண்டிய நிலை வரலாம். நினைத்த வேலையை செய்வதில் தாமதம் உண்டாகும்.
ரிஷபம்:
மனதில் நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு மிகச் சிறப்பாக உயரும். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.
மிதுனம்:
இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். பொருளாதார ரீதியாக உங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது கவனம் தேவை.
கடகம்:
உறவினர்களை பற்றி ஒரு நல்ல புரிதல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் மன வருத்தம் வரலாம். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். மனதில் நம்பிக்கை வளரும்.
சிம்மம்:
மனதில் இனம் புரியாத குழப்பமும் சிந்தனையும் ஓடிக்கொண்டே இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பால் சுமை அதிகமாகலாம். பொறுமையாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி:
இன்று சவாலான செயல்களை சாதாரணமாக செய்து பாராட்டுக்கள் பெறுவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். தாய் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று உங்களை உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். நெருங்கிய நபர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு உண்டாகும். திட்டமிட்டு செயல்களை சரியாக செய்து முடிப்பீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் வந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். மதியம் மேல் பொழுதுபோக்கு விஷயங்களில் வாழ்க்கை துணையுடன் பங்கு கொள்வீர்கள்.
தனுசு:
நீண்ட நாட்களாக நண்பரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். கலைப் பொருட்கள் வாங்குவதின் மீது நிறைய ஆர்வம் கொள்வீர்கள். உழைப்பு அதிகரிக்கும் நாள்.
மகரம்:
மனதளவில் நிறைய வலிமை உண்டாகும். படிப்பு ரீதியாக மாணவர்கள் நிறைய விஷயங்களை தேடி படிப்பார்கள். பணியில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முயற்சி வெற்றி அடையும்.
கும்பம்:
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற ஒரு ரகசியம் புரிந்து கொள்வீர்கள். மாலை மேல் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
எந்த செயலை செய்வதாக இருந்தாலும் பொறுமை அவசியம். பழைய நிகழ்வுகளை பற்றி யோசிக்காமலும் பிறரிடம் பேசாமல் இருப்பதும் நல்லது. அலுவலக ரகசியங்களை பிறரிடம் பகிராதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |