நாளைய ராசிபலன் (07-09-2026)

Report

மேஷம்:

இன்று உறவினர்கள் வழியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய மனை வாங்கும் தொடர்பான சிந்தனைகள் உயரும்.

ரிஷபம்:

இன்று முயற்சிகளில் இருந்து வந்த மறைந்த எதிர்ப்புகளை வெல்வீர்கள். உங்களுடைய வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்றம் உண்டாகும்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம். வித்தியாசமான உணவுகளை சாப்பிட விரும்புபவர்கள். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

2026: குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி.. எப்படி வழிபாடு செய்வது ?

2026: குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி.. எப்படி வழிபாடு செய்வது ?

கடகம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மனதிற்கு ஒரு ஆறுதல் பிறக்கும். புதிய முயற்சிகள் கைக்கூடும்.

சிம்மம்:

புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு ஒரு சில மாற்றங்களை உருவாக்கும். போட்டி தேர்வுகளில் நீங்கள் கலந்து கொள்வதற்கான ஆலோசனையை பெறுவீர்கள்.

கன்னி:

கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு விஷயங்களை கவனம் செலுத்துவீர்கள். புதுவித சிந்தனைகள் மனதில் தோன்றும். செல்வாக்கு உயரும்.

துலாம்:

வியாபார ரீதியாக நல்ல வரவு இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடியும்.

விருச்சிகம்:

இன்று வெளியூர் பயணங்களால் அனுபவம் பெறுவீர்கள். வேலை நிமித்தமாக முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.

தனுசு:

செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அனுபவம் உண்டாகும்.

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?

மகரம்:

இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். லாபம் உண்டாகும். பிடித்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்:

இன்று நீங்கள் உங்களுடைய பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். ஆதரவான நாள்.

மீனம்:

கற்பனை கலந்த உணர்வுகள் வழியாக உங்களுக்கு சில குழப்பங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US