இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (18/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 18, 2024 03:24 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

தள்ளிப்போன முயற்சிகள் இன்று நிறைவேறும்.வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். திட்டமிட்ட இருந்த செயலில் மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில் அக்கறை காட்டுவீர்கள் அதனால் வருமானம் அதிகரிக்கும்.  

ரிஷபம்

உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உங்கள் முயற்சிகளுக்கு சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் நினைத்த எண்ணம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்

துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும் .வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நண்பர்கள் உதவியுடன் செயலில் லாபம் காண்பீர்கள். வாங்கிய கடன்களை அடைக்கக்கூடும்.

கடகம்

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினருடைய தேவையே நிறைவேற்றுவீர்கள். சிக்கல்களை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்

செயலில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகக்கூடும். மதியம் வரை நெருக்கடிகள் இருக்கும். தேவையற்ற செலவுகள் தோன்றும். அதன் பின் நிலைமை சீராகும் .மதியத்திற்கு மேல் மனதில் குழப்பம் வந்து விலகும். பயணத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.

கன்னி

நீண்ட நாட்கள் நீங்கள் மேற்கொண்டு வந்த முயற்சி சாதகமாக அமையும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாக அமையும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி இழுபறியாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை மாற்றம் செய்யும் முயற்சிகள் ஈடுபடுவீர்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

விருச்சிகம்

முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும்.

தனுசு

எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்திலிருந்து நெருக்கடிகள் விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும் .நேற்று வரை இருந்த பிரச்சனை நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.

மகரம்

கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் துவங்குவதால் பேச்சில் எச்சரிக்கை அவசியம். பணவரவில் தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். 

கும்பம்

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் .அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் .பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும் .உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்

மீனம்

நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்கு விவாகாரம் சாதகமாக அமையும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US