நாளைய ராசி பலன் (24-01-2026)
மேஷம்:
இன்று உங்களை சுற்றி உள்ளவர்கள் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். தொழில் தொடங்குவதை பற்றி மனதில் சிந்தனை ஓடும். அலுவலகத்தில் போட்டி நிறைந்து காணப்படும்.
ரிஷபம்:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரும். உடல் சோர்வு மறையும். நண்பர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு நேரத்தில் செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்புகளை பற்றி சிந்திப்பீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் கவனம் வேண்டும்.
கடகம்:
உடன் இருப்பவர்களால் ஒரு சில தொந்தரவை நீங்கள் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் ஒரு சில சிரமங்கள் வரலாம். மாலை மேல் மனம் மகிழ்ச்சியான நிலையை பெறும்.
சிம்மம்:
இன்று சோம்பேறி தனத்தை விடுத்து நீங்கள் உழைக்க வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிந்தனைகளில் கவனம் தேவை. தாய் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கன்னி:
இன்று நண்பர்கள் வழியாக உங்களுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் இருந்த மனக்கசப்புகள் விலகும். உங்களுடைய கலகலப்பான பேச்சுக்கள் பிறரை கவரும்படி அமையும்.
துலாம்:
இன்று எதிர்பார்த்த பண வரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களைப் பற்றி புரிந்து நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
இன்று கலை சார்ந்த விஷயங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும்.
தனுசு:
இன்று தேவை இல்லாத விவாதங்களை நீங்கள் செய்யாதீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். உலக வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும் நாள்.
மகரம்:
மனதில் நினைத்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். புதிய நட்புகளின் அறிமுகம் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
கும்பம்:
இன்று தேவை இல்லாமல் யாருக்கும் வீண் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். உணவுபழக்கத்தில் சற்று கவனம் வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
மீனம்:
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் ஒரு சில சிக்கலும் தடையும் வரலாம். மதியமேல் தெளிவாக முடிவெடுக்கக் கூடிய சூழல் உருவாகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |