நாளைய ராசி பலன் (28-07-2026)
மேஷம்:
இன்று நண்பர்களுடன் அதிகமான நேரம் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
ரிஷபம்:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மனதில் காலை முதல் பதட்ட நிலைக்காணப்படும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனை விலகும். தேவை இல்லாத ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்கவும். நன்மையான நாள்.
கடகம்:
மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வந்து செல்லும். உங்களுக்காக எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.
சிம்மம்:
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். குழந்தைகள் உடல்நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டும். திறமை வெளிப்படும் நாளாக அமையப்போகிறது.
கன்னி:
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு நல்ல மதிப்பு உயரும். நன்மையான நாள்.
துலாம்:
வழக்கு விஷயங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒரு சிலர் நண்பர்களுடன் நிம்மதியான நேரம் செலவு செய்வீர்கள். உங்களுக்காக நண்பர்கள் துணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
இன்று திடீர் மருத்துவ செலவுகள் சந்திக்கலாம். வேலை ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அத்தை உடல் நிலையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
தனுசு:
இன்று வழக்கு விஷயங்களில் முக்கியமான தீர்ப்பு காணும் நாள். எதிர்பாராத இடத்தில் இருந்து பரிசு பொருட்களை பெறுவீர்கள். வருமானம் உயர்த்துவத்தைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
மகரம்:
இன்று கடினமாக உழைக்கக்கூடிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும். ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம்:
இன்று மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள். நட்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சருமபிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
இன்று பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள் வரலாம். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்களில் உள்ள குழப்பங்கள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |