நாளைய ராசிபலன் (22-06-2026)
மேஷம்:
எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வேலை ரீதியாக ஒரு சில நபரை சந்திப்பீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
குழந்தைகள் வழியே நற்செய்தி வந்து சேரும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மிதுனம்:
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக முழு கவனம் செலுத்த வேண்டும். தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.
கடகம்:
இன்று உங்கள் மறைமுக திறமைகள் வெளிப்படும். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொண்டு பரிசுகள் வெல்வார்கள். நெருக்கடிகள் விலகும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்.
சிம்மம்:
சுப காரியம் தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவைப் பெறும். குடும்பத்தில் உங்கள் மீது நம்பிக்கையும் அன்பும் உருவாகும். புதிய நபர்களில் அறிமுகம் கிடைக்கும். நன்மையான நாள்.
கன்னி:
உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.
துலாம்:
நினைத்த வேலைகளை நினைத்தது போல் செய்து முடிப்பீர்கள். வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்:
குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் வரும். புதிய முடிவுகளை எடுக்கின்ற பொழுது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு:
பேச்சுக்களில் தெளிவு பிறக்கும். அலுவலக பணிகளில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் புதிய வேலை ஆட்களை பெறுவீர்கள்.
மகரம்:
உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது அவசியம். கடன் அடைப்பதற்கான சூழல் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.
கும்பம்:
கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய நண்பர்கள் வழியாக சில மன வருத்தங்களை சந்திக்கலாம். எதிர்பார்த்த நிகழ்ச்சிகள் நடப்பதற்கு காலதாமதம் ஆகலாம்.
மீனம்:
புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் செல்லத்துவீர்கள். வேலையில் ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். வழக்கு விஷயம் சாதகமாக முடியும்.