நாளைய ராசி பலன் (08-03-2026)
மேஷம்:
இன்று நணபர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் வீடுகளில் அமைதியான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
நெருங்கியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு எடுப்பது நன்மை அளிக்கும்.
மிதுனம்:
திருமண வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் இருந்த குழப்பம் விலகும். பெற்றோர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
மனக்குழப்பம் விலகும். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து உயர்ந்து நிற்கக்கூடிய நாள். குழந்தைகள் வாழ்க்கைக்காக முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நாள்.
சிம்மம்:
அரசியல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். பணவரவு விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி:
சொந்தங்களால் சந்தித்த அவமானங்கள் விலகும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை பெரும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
துலாம்:
உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். வாழ்க்கை துணையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
தனுசு:
இன்று உங்கள் சுற்றியுள்ள நபர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்வது நன்மை அளிக்கும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.
மகரம்:
இன்று தேவை இல்லாத மன அழுத்தம் உண்டாகலாம். புதிதாக சில விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள முயல்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான சில முக்கிய ஏற்பாடுகளை செய்வீர்கள்.
கும்பம்:
இன்று காலை முதல் மிகவும் கடினமாக இருப்பீர்கள். குடும்பத்துடன் சில சுற்றுலா பயணம் செல்ல நேரலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.நன்மையான நாள்.
மீனம்:
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |