நாளைய ராசி பலன் (06-09-2026)
மேஷம்:
நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆறுதலையும் ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வேலை மாற்றம் தொடர்பான விஷயங்கள் கைக்கூடும்.
மிதுனம்:
குடும்பத்தில் மன கசப்புகள் உண்டாகும். வெளியூர் பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்வி தொடர்பாக இருந்த தடைகள் யாவும் விலகும். நன்மையான நாள்.
கடகம்:
குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பமும் சந்தேகமும் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் பற்றிய சிந்தனை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆறுதல் பெறுவீர்கள்.
சிம்மம்:
திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்கள் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கடன் சுமை குறைய வழி பிறக்கும்.
கன்னி:
மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் கவலையும் உண்டாகும். மருத்துவ ரீதியாக சந்தித்த இன்னல்கள் விலகும். உறவினர்கள் இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
துலாம்:
மனதில் நம்பிக்கை பிறக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கியமான வேலையை குழப்பம் இன்றி முடிப்பீர்கள். குலதெய்வம் ஆலயம் செல்வீர்கள்.
விருச்சிகம்:
அத்தை வழி உறவுகளால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தனுசு:
பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் சுமை குறைய வழி பிறக்கும். குடும்பத்தில் நற்செய்தி தேடி வரும் நாள்.
மகரம்:
உடன் பிறந்தவர்களுக்கு முக்கிய விஷயம் செய்து கொடுப்பீர்கள். தொழில் முன்னேற்றம் அடைய முக்கிய நபரை சந்திக்கும் நாள். அரசியல் தொடர்பில் கவனம் வேண்டும்.
கும்பம்:
தாய் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்காக நேரம் செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு குல தெய்வம் அருள் கிடைக்கும். நன்மையான நாள்.
மீனம்:
சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். முக்கிய நபரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். பணம் பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொடுத்த வகை காப்பாற்றுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |