நாளைய ராசி பலன் (11-05-2026)

Report

மேஷம்:

வியாபார ரீதியாக காலை முதல் சில குழப்பங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்களால் சந்தித்த பிரச்சனைகள் விலகும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

ரிஷபம்:

இன்று உங்கள் குடும்பங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட பணம் கைகளுக்கு வந்து சேரும்.

மிதுனம்:

திருமண வரன் பார்க்கும் விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட கசப்பு விலகும்.

கடகம்:

இன்று திடீர் பயணம் செல்ல நேரலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். குழந்தைகள் கல்விக்காக சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நாக தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நாக தோஷம் இருந்தால் திருமணம் நடக்காதா?

சிம்மம்:

இன்று நீங்கள் வியாபார ரீதியாக வெளியில் பயணம் செல்ல நேரலாம். எதிர்காலம் பற்றிய பயமும் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதை பற்றிய பதட்டமும் உண்டாகலாம். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.

கன்னி:

உங்களை சுற்றி உள்ள நபர்கள் யார் எப்படி என்று புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியே தடைப்பட்டு இருந்த விஷயங்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். குடும்பத்தில் ஆதரவு உண்டு.

துலாம்:

இன்று மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். எதையும் சாதித்து விடலாம் என்கின்ற சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.

விருச்சிகம்:

இன்று தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை குடும்பத்தில் தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேலை மாற்றம் நடக்க வாய்ப்பு உண்டு.

2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்

2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் குதிக்க போகும் ராசிகள்

தனுசு:

எதிரிகளால் சந்தித்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தினர் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியம் பேச்சு வார்த்தை நினைத்தது போல் நடக்கும்.

மகரம்:

இன்று நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் உங்களுக்கு எதிரானவர்களை தைரியமாக எதிர்த்து சமாளிப்பீர்கள்.

கும்பம்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாளாகவே அமையப்போகிறது. குடும்பத்தில் நீங்கள் முக்கிய முடிவு எடுக்க தள்ளப்படுவீர்கள்.

மீனம்:

இன்று உங்களுக்கு உடல் சோர்வு மனசார்பு உண்டாகலாம். பிள்ளைகளைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் சந்தித்த பின்னடைவில் இருந்து விடுபடுவீர்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US