நாளைய ராசிபலன் (07-11-2026)

Report

மேஷம்:

எதிர்பார்த்த சில வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் கலந்து பேசி சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வேளையில் அனுகூலம் கிடைக்கும். புதிய வாகனங்களில் வாங்கும் திட்டம் போடுவீர்கள்.

ரிஷபம்:

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

மிதுனம்:

உலக வாழ்க்கை குறித்த புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். நுணுக்கமான கலைகள் மீது உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

கடகம்:

உயர் அதிகாரிகள் உடைய சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு பிறக்கும். போட்டிகளை சமாளிப்பீர்கள்.

சிம்மம்:

நினைத்த வேலைகளில் சில தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம்.

கன்னி:

முன்கோபத்தை குறைத்துக் கொள்வது அவசியம். தாய் வழியே உறவினர்களை அனுசரித்து செல்லவும். சிறுதூரப் பயணங்களால் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.

துலாம்:

பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது அவசியம். பேச்சுக்களில் சற்று நிதானம் கடைபிடிப்பது முக்கியம். நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும்.

விருச்சிகம்:

கல்வி தொடர்பான வேலைகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் இருந்து எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகள் விலகும்.

தனுசு:

பொருளாதாரம் நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள்.

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

சனியை வென்ற தசரத மகாராஜா... சனி திசை நடப்பவர்கள் இவரை பற்றிக்கொள்ளுங்கள்

மகரம்:

வேலைகளில் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மாறுபட்ட சில விஷயங்களில் வழியாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்:

குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் வர தாமதம் ஆகலாம். அரசு வேலைகளில் பொறுமை வேண்டும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகலாம்.

மீனம்:

மனதளவில் புதிய சிந்தனை உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US