வாழ்க்கையை மாற்றும் மகா கந்த சஷ்டி விரதம்.. எப்படி இருப்பது?
இந்து மத சாஸ்திரத்தில் கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் அவருக்கு விரதம் இருந்து அனுஷ்டிப்பதும் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்றுக்கொடுக்கும்
அந்த வகையில், முருக பக்தர்கள் எல்லோரும் காத்திருந்து விரதம் இருக்கக் கூடிய ஒரு அற்புத தினமாக இந்த மகா கந்த சஷ்டி விரதம் இருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து நாம் கேட்க கூடிய அனைத்து வரத்தையும் முருகப்பெருமான் நமக்கு வழங்குவார் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், இந்த மகா கந்தசஷ்டி விரதம் மகிமையும், அந்த விரதம் இருக்கும் முறையைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல முருக பக்தர் ஜே. எஸ். கே கோபி அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த இடம் இலங்கை மண்டூர் கந்தசாமி ஆலயம்.

இந்த நிகழ்வு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் இலங்கை ஆகிய நான்கு இடங்களிலும் தொடர்புடையதாக இருக்கிறது. 48 நாட்கள் மண்டல விரதம் இருப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதும் நமக்கு மிகச் சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
விரதம் என்பது மனதை உருநிலைப்படுத்தி இறைவனோடு இணைக்க கூடிய ஒன்றாகும். மேலும், ஒருவருடைய பக்தி என்பது ஒரு பயத்தினாலோ அல்லது சம்பிரதாயங்களை செய்வதால் ஏற்படக்கூடிய குழப்பத்தினாலும் வரக்கூடாது.
மாறாக இறைவன் மீது வைத்திருக்க கூடிய அன்பு அமைதியை வேண்டியும் வழிபாடு செய்வது அவசியமாகும் என்கிறார். அதேபோல், முருகப்பெருமானை இன்று கையில் வேல் ஏந்தி இருப்பதை நாம் பார்த்து வழிபாடு செய்கின்றோம்.
ஆனால், அவர் திரிசூலத்துடன் வழிபட்டார் என்பதற்கான ஆதாரங்களும் ஓலைச்சுவடியில் இருப்பதாக சொல்லப்படுகிறது என்று முருகப்பெருமானை பற்றி பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |