அரச மரத்தை மறந்தும் இந்த நாட்களில் வழிபாடு செய்யாதீர்கள்
இந்து மதத்தில் மரங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றோம். அதில் மிக முக்கியமாக அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம் போன்றவை இறைவழிபாட்டில் முதல் இடம் பிடித்திருக்கிறது.
இதில் குறிப்பாக இந்த அரச மரம் மிக சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. பெரும்பாலான கோயில்களில் இந்த அரச மரம் தல விருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவர் வாழ்க்கையில் நீண்ட காலமாக படும் துன்பத்தில் இருந்து வெளியே வர அரசமரத்தை வழிபாடு செய்வதால் அவர்கள் சிறந்த பலனை பெறலாம் என்கின்றனர்.
மேலும், இந்துக்கள் அரசமரத்தில் தெய்வம் வாசம் செய்வதாக நம்புகிறார்கள். அதனால் அரசமரத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு, விசேஷ நாட்களில் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், கடவுளின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெற முடியும் என்கிறார்கள்.
அப்படியாக, அரச மரத்தை எப்பொழுதெல்லாம் வழிபாடு செய்யலாம்? எப்பொழுது எல்லாம் வழிபாடு செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
மஹாவிஷ்ணுவின் அருளையும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் பெற சூரிய உதயத்தின்போது ஒரு விளக்கு ஏற்றி அரச மரத்தை வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் குறிப்பாக அரச மரத்தை அமாவாசை மற்றும் சனிக் கிழமைகளில் வழிபாடு செய்வதின் மூலம் அவர்கள் விநாயகப்பெருமானின் அருள் ஆசியை பெறலாம்.
சனி தோஷ பாதிப்பில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்று அரச மரத்தின் அடியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவது நல்ல நிவாரணம் கொடுக்கும்.
அவ்வாறு செய்யும் பொழுது சனி பகவானால் ஏற்படும் கடின துன்பங்கள் விலகுகிறது. அதே போல் சனிக்கிழமையை தவிர பிற நாட்களில் நாம் அரசமரத்தை வழிபாடு செய்யக்கூடாது என்கிறார்கள்.
அவ்வாறு செய்யும் பொழுது வீடுகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரச மரத்தை வழிபடுவது நல்லதல்ல என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |