இன்றைய ராசி பலன்(01.12.2024)

Report

 மேஷம்

இன்று பயணங்களை தவிர்ப்பது நல்லது.பிறர் குணம் அறிந்து வாக்குறுதிகள் கொடுக்கவேண்டும்.மனதில் தேவை இல்லாத சிந்தனைகள் தோன்றும்.குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும்.

ரிஷபம்

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.வேலையில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றும்.திட்டமிட்டபடி செயலை செய்து முடிப்பீர்கள்.இனிமையான நாள்.

மிதுனம்

மனதில் உண்டான எதிர்பார்ப்பு விலகும்.உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகி செல்வர்.பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.வருவாய் அதிகரிக்கும்.சந்தோஷமான நாள்.

கடகம்

குடும்ப சூழலால் மன கஷ்டம் உண்டாகும்.பழைய பிரச்சனை மீண்டும் தலையெடுக்கும்.உங்கள் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.உறவினர் வருகையால் சந்தோசம் உண்டாகும்.

சிம்மம்

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு முடிவு எடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.

கன்னி

உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.தொழில் முன்னேற்றம் உங்களுக்கு நிம்மதியை தரும்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் உருவாகும்.குலதெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

கருடன் இருக்க கவலை ஏன்?

கருடன் இருக்க கவலை ஏன்?

 

துலாம்

மனதில் தன்னம்பிக்கை உயரும்.பிறர் குணம் அறிந்து செயல்படுவீர்கள்.கடவுள் மீது நாட்டம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.குடும்ப சூழல் சந்தோஷமாக அமையும்.

விருச்சிகம்

மனதில் வஞ்சகம் இல்லாமல் செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்.தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரும்.மறைமுக எதிரிகள் விலகி செல்வர்.கவனமாக இருக்கவேண்டிய நாள்.

தனுசு

இன்று ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.தேவை நிறைவேறும்.

மகரம்

எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உறவுகளால் வேலை நடக்கும்.

கும்பம்

வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசிப்பீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.எடுக்கும் முயற்சிகள் எளிதல் வெற்றி அடையும்.

மீனம்

குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.முயற்சிகள் எல்லாம் வெற்றியாக அமையும்.மனதில் நீண்ட இருந் வருத்தம் நீங்கும்.கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.இனிமையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

      

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US