2026: சுக்கிரனால் அதிர்ஷ்டம்! டிசம்பரில் மிதுன ராசிக்கு காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

By Sakthi Raj Nov 17, 2026 06:43 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு மாதமும் கிரகங்களுடைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், கிரக மாற்றங்கள் மற்றும் ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இந்த மாதத்தில் இவர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா தொடர்பான பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது அவசியம். அதேபோல், சுக்கிரன் இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் பணவரவு சீராக இருக்கும்.

வாங்கிய கடன்களை அடைக்க கூடிய யோகம் கிடைக்கும். புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

2027 சனி பெயர்ச்சி: இந்த 2 ராசிகளுக்கு அஷ்டம சனி, கண்டக சனி தொடங்குகிறது

2027 சனி பெயர்ச்சி: இந்த 2 ராசிகளுக்கு அஷ்டம சனி, கண்டக சனி தொடங்குகிறது

அதேபோல், மாணவர்கள் சோசியல் மீடியா பயன்பாடுகளை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சகோதரர்களிடையே சில கருத்து மோதல்கள் வரலாம். எனவே எச்சரிக்கையாக பேசுவதும் பழகுவதும் வேண்டும். அதேசமயம், மனைவியால் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையும் லாபமும் உருவாகும். இவர்கள் டிசம்பர் 15 மற்றும் 27ஆம் தேதிகளில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது தடைகளை போக்கி கொடுக்கும்.

டிசம்பர் 12 மற்றும் 13, 14 தேதிகளில் மிகப்பெரிய அளவில் முக்கியமான முடிவுகள் எடுப்பதையும் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்கலாம் மேலும், ஜோதிட ரீதியாக மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US